Video of the Day
Latest TV News Bulletin
Most Top News

ரியாத்துக்கான வானூர்தி சேவைகள் இன்றும், நாளையும் இடைநிறுத்தம்

General 09 October 2026
ரியாத்துக்கான வானூர்தி சேவைகள் இன்றும், நாளையும் இடைநிறுத்தம்

ஹூதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்: பாதுகாப்பு கருதி ரியாத்துக்கான வானுார்திச் சேவைகளை ரத்து செய்தது ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்!

General 09 October 2026
ஹூதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்: பாதுகாப்பு கருதி ரியாத்துக்கான வானுார்திச் சேவைகளை ரத்து செய்தது ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்!

5 மாவட்டங்களில் புதிய உந்துருளிகளுக்கான பதிவுகள் ஆரம்பம்!

General 09 October 2026
5 மாவட்டங்களில் புதிய உந்துருளிகளுக்கான பதிவுகள் ஆரம்பம்!

VAT வரியை குறைத்து மக்களுக்கு நிவாரணம் வழங்க ஜனாதிபதி அதிரடி திட்டம்!

General 08 October 2026
VAT வரியை குறைத்து மக்களுக்கு நிவாரணம் வழங்க ஜனாதிபதி அதிரடி திட்டம்!

ராஜபக்ஷ குடும்பத்தினர் முதல் முக்கிய புள்ளிகள் வரை: நாடாளுமன்றில் பட்டியலை வெளியிட்டு பிமல் ரத்நாயக்க அதிரடி!

General 08 October 2026
ராஜபக்ஷ குடும்பத்தினர் முதல் முக்கிய புள்ளிகள் வரை: நாடாளுமன்றில் பட்டியலை வெளியிட்டு பிமல் ரத்நாயக்க அதிரடி!

செப்புக் கம்பிகளைத் திருட வந்ததாகக் கூறப்படும் நபர் மீது துப்பாக்கிச் சூடு!

General 08 October 2026
செப்புக் கம்பிகளைத் திருட வந்ததாகக் கூறப்படும் நபர் மீது துப்பாக்கிச் சூடு!
International News

தமிழ்நாடு - தாராபுரம் தொகுதி வாக்கு எண்ணிக்கையில் அதிமுக முன்னிலை: தவெக பின்னடைவு

International 09 October 2026
தமிழ்நாடு - தாராபுரம் தொகுதி வாக்கு எண்ணிக்கையில் அதிமுக முன்னிலை: தவெக பின்னடைவு

இந்திய விமானிக்கு இஸ்ரேலின் ஜனாதிபதி விருது – வானூர்தி விபத்தைத் தவிர்க்க உதவியமைக்காக கௌரவிப்பு

International 09 October 2026
இந்திய விமானிக்கு இஸ்ரேலின் ஜனாதிபதி விருது – வானூர்தி விபத்தைத் தவிர்க்க உதவியமைக்காக கௌரவிப்பு

தமிழ்நாட்டில் மதுராந்தகம், தாராபுரம் தொகுதி வாக்கு எண்ணிக்கை: தவெக முன்னிலை

International 09 October 2026
தமிழ்நாட்டில் மதுராந்தகம், தாராபுரம் தொகுதி வாக்கு எண்ணிக்கை: தவெக முன்னிலை

தமிழகத்தின் மதுராந்தகம், தாராபுரத்தில் யாருக்கு வெற்றி? இன்று வாக்கு எண்ணிக்கை

International 09 October 2026
தமிழகத்தின் மதுராந்தகம், தாராபுரத்தில் யாருக்கு வெற்றி? இன்று வாக்கு எண்ணிக்கை

அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர் அதிரடி அறிவிப்பு: நேரலையில் நிறைவேற்றப்படவுள்ள மரண தண்டனை!

International 09 October 2026
அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர் அதிரடி அறிவிப்பு: நேரலையில் நிறைவேற்றப்படவுள்ள மரண தண்டனை!

8 மாத விண்வெளிப் பயணம் நிறைவு: பசுபிக் பெருங்கடலில் பாதுகாப்பாகத் தரையிறங்கிய 'க்ரூ-12' விண்வெளி வீரர்கள்!

International 09 October 2026
8 மாத விண்வெளிப் பயணம் நிறைவு: பசுபிக் பெருங்கடலில் பாதுகாப்பாகத் தரையிறங்கிய 'க்ரூ-12' விண்வெளி வீரர்கள்!

சமூக ஊடகத்தில் ட்ரம்ப் பரபரப்புப் பதிவு: ஈரானுடன் சுமுக பேச்சுவார்த்தை நடைபெறுவதாகத் தகவல்!

International 09 October 2026
சமூக ஊடகத்தில் ட்ரம்ப் பரபரப்புப் பதிவு: ஈரானுடன் சுமுக பேச்சுவார்த்தை நடைபெறுவதாகத் தகவல்!

அவுஸ்திரேலியாவில் முதன்முறையாக டெங்கு தடுப்பூசிக்கு அனுமதி!

International 09 October 2026
அவுஸ்திரேலியாவில் முதன்முறையாக டெங்கு தடுப்பூசிக்கு அனுமதி!

ட்ரம்பின் தங்க நிற நிர்வாணச் சிலை: ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் வெளிப்பட்ட எதிர்ப்பு - அதிர வைக்கும் பின்னணி!

International 08 October 2026
ட்ரம்பின் தங்க நிற நிர்வாணச் சிலை: ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் வெளிப்பட்ட எதிர்ப்பு - அதிர வைக்கும் பின்னணி!

பிரபல இந்திய நடிகர் நானா படேகர் காலமானார்

International 08 October 2026
பிரபல இந்திய நடிகர் நானா படேகர் காலமானார்

ஹோர்முஸ் நீரிணையில் பாதுகாப்பான கப்பல் போக்குவரத்து: ஈரான் - ஓமான் இடையே முக்கிய உடன்பாடு!

International 08 October 2026
ஹோர்முஸ் நீரிணையில் பாதுகாப்பான கப்பல் போக்குவரத்து: ஈரான் - ஓமான் இடையே முக்கிய உடன்பாடு!

கட்டார் அருகே எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

International 08 October 2026
கட்டார் அருகே எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

சவூதி வானூர்தி நிலையங்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்: 3 பேர் பலி, 36 பேர் காயம்!

International 08 October 2026
சவூதி வானூர்தி நிலையங்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்:  3 பேர் பலி, 36 பேர் காயம்!

மனித நடவடிக்கைகளால் பறவைகளின் குரல் மாறுபாடு: இமயமலை ஆராய்ச்சியில் அதிர்ச்சித் தகவல்!

International 08 October 2026
மனித நடவடிக்கைகளால் பறவைகளின் குரல் மாறுபாடு: இமயமலை ஆராய்ச்சியில் அதிர்ச்சித் தகவல்!

தோல்வியடைந்த மரண தண்டனை நிறைவேற்றம்: உணர்வு திரும்பிய அமெரிக்க பெண் கைதி கிறிஸ்டா பைக்!

International 08 October 2026
தோல்வியடைந்த மரண தண்டனை நிறைவேற்றம்: உணர்வு திரும்பிய அமெரிக்க பெண் கைதி கிறிஸ்டா பைக்!
More News
General08 October 2026

ஞானசார தேரரை காவி உடையுடன் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மனு

சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கலகொட அத்தே ஞானசார தேரரை அவரது பௌத்த துறவியரின் காவி உடையுடன் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு சிறை அதிகாரிகளுக்கு உத்தரவிடக் கோரி, உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.இந்த மனுவின் பிரதிவாதிகளாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம், நீதி அமைச்சின் செயலாளர் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.ஞானசார தேரர் நீதிமன்ற நடவடிக்கைகளில் பௌத்த துறவியர் உடையில் முன்னிலைப்படுத்தப்படுவதற்கான உத்தரவை பிறப்பிக்குமாறு மனுதாரர் கோரியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபரங்களுக்கு
ஞானசார தேரரை காவி உடையுடன் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மனு
General08 October 2026

அக்குரேகொட வழக்கறிஞர் தம்பதி மீதான தாக்குதல் – போலி ஆவணங்கள் தயாரித்தவர் கைது

தலங்கம – அக்குரேகொட பகுதியில் வழக்கறிஞர் மற்றும் அவரது மனைவி மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபருக்கு போலி ஆவணங்களைத் தயாரித்து வழங்கியதாகக் கூறப்படும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.மேல் மாகாண தெற்கு குற்றப்பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கையின்போதே குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.கடந்த பெப்ரவரி 13ஆம் திகதி அக்குரேகொட பகுதியில் வழக்கறிஞர் மற்றும் அவரது மனைவி மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்தது.இந்தச் சம்பவத்தின் பிரதான சந்தேகநபருக்கு போலி ஆவணங்களைத் தயாரித்து வழங்கி உதவியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவரிடம் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

விபரங்களுக்கு
அக்குரேகொட வழக்கறிஞர் தம்பதி மீதான தாக்குதல் – போலி ஆவணங்கள் தயாரித்தவர் கைது
General08 October 2026

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான வழக்கு – அடுத்தகட்ட சாட்சிய விசாரணைக்கு திகதி நிர்ணயம்

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச, அமைச்சராக பதவி வகித்த காலப்பகுதியில் தனது சட்டபூர்வ வருமானத்தை விட 75 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான சொத்துக்களை முறைகேடாகச் சேர்த்ததாகக் கூறி, கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் மேலதிக சாட்சிய விசாரணையை எதிர்வரும் 20ஆம் திகதி நடத்த கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மொஹமட் மிஹாயில் முன்னிலையில் குறித்த வழக்கு இன்று (08) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.இதன்போது, வழக்கின் அடுத்தகட்ட சாட்சிய விசாரணைக்காக முறைப்பாட்டுத் தரப்பின் 31, 32 மற்றும் 33ஆம் இலக்க சாட்சிகள் எதிர்வரும் 20ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு நீதிபதி அழைப்பாணை பிறப்பித்துள்ளார்.இதேவேளை, வழக்குடன் தொடர்புடைய மூன்று சாட்சிகள் இன்று (08) நீதிமன்றில் சாட்சியம் வழங்கியுள்ளனர்.வழக்கின் பிரதிவாதியான முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவும் இன்று திறந்த நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

விபரங்களுக்கு
முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான வழக்கு – அடுத்தகட்ட சாட்சிய விசாரணைக்கு திகதி நிர்ணயம்
General08 October 2026

ஷிரான் பாசிக்கிற்குச் சொந்தமான 10 கோடி ரூபாய் பெறுமதியான சொத்துக்கள் முடக்கம்

பிரதான போதைப்பொருள் கடத்தல்காரரான ஷிரான் பாசிக் என்பவர், தனது தந்தை மற்றும் தனியார் மேலதிக வகுப்பாசிரியர் ஆகியோரின் பெயர்களில் கொள்வனவு செய்ததாகக் கூறப்படும் 10 கோடி ரூபாவிற்கும் அதிக மதிப்புடைய சொத்துக்கள் 14 நாட்களுக்கு முடக்கப்பட்டுள்ளன.இந்தச் சொத்துக்களில் வீடு , விடுதி கட்டடம் மற்றும் 2 காணிகள் அடங்குவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை காவல்துறையின் மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் மேற்கொண்டு வருகிறது.

விபரங்களுக்கு
ஷிரான் பாசிக்கிற்குச் சொந்தமான 10 கோடி ரூபாய் பெறுமதியான சொத்துக்கள் முடக்கம்
General08 October 2026

கச்சத்தீவு விவகாரத்தில் அதிரடி திருப்பம் - இந்திய உச்சநீதிமன்றத்தின் அவதானிப்பு இலங்கைக்கு சாதகமா? அமைச்சர் விளக்கம்

கச்சத்தீவு மற்றும் இந்தியா – இலங்கை கடல் எல்லை தொடர்பில் இந்திய உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ள அவதானிப்புகளை வரவேற்பதாக கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். தமிழக கடற்றொழிலாளர்கள் சர்வதேச கடல் எல்லையைத் தாண்டி இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்து கடற்றொழிலில் ஈடுபடுவதைத் தவிர்க்கும் வகையில், அவர்களுக்கு உரிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என இந்திய உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது.கச்சத்தீவை இந்தியாவிடம் மீளப் பெற வேண்டும் எனக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணையின்போதே இந்த அவதானிப்புகள் முன்வைக்கப்பட்டுள்ளன.கச்சத்தீவு பகுதியில் கடற்றொழிலில் ஈடுபடும் தமிழக கடற்றொழிலாளர்களுக்கு, சர்வதேச கடல் எல்லையைத் தாண்டாமல் இருப்பதற்கான தெளிவான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் வலியுறுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில், இலங்கை கடற்பரப்பிற்குள் வெளிநாட்டு கடற்றொழில் படகுகள் அத்துமீறி நுழைவதால், வடமாகாண கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்திற்கும் கடல் வளங்களுக்கும் பாதிப்பு ஏற்படுவதாக அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.1974ஆம் ஆண்டு இந்தியா – இலங்கை ஒப்பந்தம் மற்றும் 1976ஆம் ஆண்டு கடல் எல்லை மற்றும் கடற்றொழில் தொடர்பான ஏற்பாடுகளின் அடிப்படையில், கச்சத்தீவு விவகாரத்தில் இலங்கையின் நிலைப்பாடு தெளிவாக உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.இரு நாடுகளினதும் கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையும் கடல் வளங்களையும் பாதுகாக்கும் வகையில், பேச்சுவார்த்தைகள் மற்றும் இராஜதந்திர வழிமுறைகள் ஊடாக நீடித்த தீர்வை எட்ட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.இதனிடையே, கச்சத்தீவு தொடர்பான மனுக்கள் மீதான விசாரணையில், 1974 மற்றும் 1976ஆம் ஆண்டு ஒப்பந்தங்களின் சட்டப்பூர்வ செல்லுபடியாகும் தன்மை குறித்து இந்திய உச்சநீதிமன்றம் இதுவரை இறுதித் தீர்ப்பு எதனையும் வழங்கவில்லை.இந்த வழக்கின் மேலதிக விசாரணை 2027ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

விபரங்களுக்கு
கச்சத்தீவு விவகாரத்தில் அதிரடி திருப்பம் - இந்திய உச்சநீதிமன்றத்தின் அவதானிப்பு இலங்கைக்கு சாதகமா? அமைச்சர் விளக்கம்
International News

தமிழ்நாடு - தாராபுரம் தொகுதி வாக்கு எண்ணிக்கையில் அதிமுக முன்னிலை: தவெக பின்னடைவு

International 09 October 2026
தமிழ்நாடு - தாராபுரம் தொகுதி வாக்கு எண்ணிக்கையில் அதிமுக முன்னிலை: தவெக பின்னடைவு

இந்திய விமானிக்கு இஸ்ரேலின் ஜனாதிபதி விருது – வானூர்தி விபத்தைத் தவிர்க்க உதவியமைக்காக கௌரவிப்பு

International 09 October 2026
இந்திய விமானிக்கு இஸ்ரேலின் ஜனாதிபதி விருது – வானூர்தி விபத்தைத் தவிர்க்க உதவியமைக்காக கௌரவிப்பு

தமிழ்நாட்டில் மதுராந்தகம், தாராபுரம் தொகுதி வாக்கு எண்ணிக்கை: தவெக முன்னிலை

International 09 October 2026
தமிழ்நாட்டில் மதுராந்தகம், தாராபுரம் தொகுதி வாக்கு எண்ணிக்கை: தவெக முன்னிலை

தமிழகத்தின் மதுராந்தகம், தாராபுரத்தில் யாருக்கு வெற்றி? இன்று வாக்கு எண்ணிக்கை

International 09 October 2026
தமிழகத்தின் மதுராந்தகம், தாராபுரத்தில் யாருக்கு வெற்றி? இன்று வாக்கு எண்ணிக்கை

அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர் அதிரடி அறிவிப்பு: நேரலையில் நிறைவேற்றப்படவுள்ள மரண தண்டனை!

International 09 October 2026
அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர் அதிரடி அறிவிப்பு: நேரலையில் நிறைவேற்றப்படவுள்ள மரண தண்டனை!

8 மாத விண்வெளிப் பயணம் நிறைவு: பசுபிக் பெருங்கடலில் பாதுகாப்பாகத் தரையிறங்கிய 'க்ரூ-12' விண்வெளி வீரர்கள்!

International 09 October 2026
8 மாத விண்வெளிப் பயணம் நிறைவு: பசுபிக் பெருங்கடலில் பாதுகாப்பாகத் தரையிறங்கிய 'க்ரூ-12' விண்வெளி வீரர்கள்!

சமூக ஊடகத்தில் ட்ரம்ப் பரபரப்புப் பதிவு: ஈரானுடன் சுமுக பேச்சுவார்த்தை நடைபெறுவதாகத் தகவல்!

International 09 October 2026
சமூக ஊடகத்தில் ட்ரம்ப் பரபரப்புப் பதிவு: ஈரானுடன் சுமுக பேச்சுவார்த்தை நடைபெறுவதாகத் தகவல்!

அவுஸ்திரேலியாவில் முதன்முறையாக டெங்கு தடுப்பூசிக்கு அனுமதி!

International 09 October 2026
அவுஸ்திரேலியாவில் முதன்முறையாக டெங்கு தடுப்பூசிக்கு அனுமதி!

ட்ரம்பின் தங்க நிற நிர்வாணச் சிலை: ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் வெளிப்பட்ட எதிர்ப்பு - அதிர வைக்கும் பின்னணி!

International 08 October 2026
ட்ரம்பின் தங்க நிற நிர்வாணச் சிலை: ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் வெளிப்பட்ட எதிர்ப்பு - அதிர வைக்கும் பின்னணி!

பிரபல இந்திய நடிகர் நானா படேகர் காலமானார்

International 08 October 2026
பிரபல இந்திய நடிகர் நானா படேகர் காலமானார்

ஹோர்முஸ் நீரிணையில் பாதுகாப்பான கப்பல் போக்குவரத்து: ஈரான் - ஓமான் இடையே முக்கிய உடன்பாடு!

International 08 October 2026
ஹோர்முஸ் நீரிணையில் பாதுகாப்பான கப்பல் போக்குவரத்து: ஈரான் - ஓமான் இடையே முக்கிய உடன்பாடு!

கட்டார் அருகே எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

International 08 October 2026
கட்டார் அருகே எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

சவூதி வானூர்தி நிலையங்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்: 3 பேர் பலி, 36 பேர் காயம்!

International 08 October 2026
சவூதி வானூர்தி நிலையங்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்:  3 பேர் பலி, 36 பேர் காயம்!

மனித நடவடிக்கைகளால் பறவைகளின் குரல் மாறுபாடு: இமயமலை ஆராய்ச்சியில் அதிர்ச்சித் தகவல்!

International 08 October 2026
மனித நடவடிக்கைகளால் பறவைகளின் குரல் மாறுபாடு: இமயமலை ஆராய்ச்சியில் அதிர்ச்சித் தகவல்!

தோல்வியடைந்த மரண தண்டனை நிறைவேற்றம்: உணர்வு திரும்பிய அமெரிக்க பெண் கைதி கிறிஸ்டா பைக்!

International 08 October 2026
தோல்வியடைந்த மரண தண்டனை நிறைவேற்றம்: உணர்வு திரும்பிய அமெரிக்க பெண் கைதி கிறிஸ்டா பைக்!
Sports Stories
Explore More
இலங்கை – பாகிஸ்தான் முதலாவது டி20 போட்டி இன்று ஆரம்பம்

இலங்கை – பாகிஸ்தான் முதலாவது டி20 போட்டி இன்று ஆரம்பம்

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 சர்வதேச கிரிக்கெட் போட்டி இன்று (09) நடைபெறவுள்ளது. பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் நடைபெறவுள்ள இந்த போட்டி, உள்ளூர் நேரப்படி மாலை 6.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையில் இதுவரை நடைபெற்றுள்ள 30 டி20 சர்வதேச போட்டிகளில் பாகிஸ்தான் அணி 18 போட்டிகளிலும், இலங்கை அணி 12 போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளன. சர்வதேச டி20 தரவரிசையில் இலங்கை அணி 221 புள்ளிகளுடன் 9ஆவது இடத்திலும், பாகிஸ்தான் அணி 240 புள்ளிகளுடன் 6ஆவது இடத்திலும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

விபரங்களுக்கு
சீனா திறந்த டென்னிஸ் போட்டி: அரையிறுதிக்கு முன்னேறிய ரஷ்ய வீராங்கனை மிர்ரா ஆண்ட்ரீவா!

சீனா திறந்த டென்னிஸ் போட்டி: அரையிறுதிக்கு முன்னேறிய ரஷ்ய வீராங்கனை மிர்ரா ஆண்ட்ரீவா!

சீனத் தலைநகர் பீஜிங்கில் சீனா திறந்த டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் காலிறுதிச் சுற்றில், ரஷ்யாவின் மிர்ரா ஆண்ட்ரீவா (Mirra Andreeva) தன் சக நாட்டு வீராங்கனையான எகடெரினா அலெக்சாண்ட்ரோவாவுடன் (Ekaterina Alexandrova) மோதினார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடிய மிர்ரா ஆண்ட்ரீவா 7-6 (7-4), 7-6 (7-3) என்ற கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். அரையிறுதிப் போட்டியில் இவர் செக் குடியரசின் நிகோலா பார்துன்கோவாவை (Nikola Bartunkova) எதிர்கொள்ளவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

விபரங்களுக்கு
இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் புதிய தலைவராக குசல் மெண்டிஸ் நியமனம்

இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் புதிய தலைவராக குசல் மெண்டிஸ் நியமனம்

இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் புதிய தலைவராக குசல் மெண்டிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.ஸ்ரீலங்கா கிரிக்கெட் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா கிரிக்கெட் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற இலங்கை கிரிக்கெட் தேர்வுக்குழு கூட்டத்தின் போதே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெறவுள்ள இரண்டு போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் இருந்து குசல் மெண்டிஸ், டெஸ்ட் அணியின் தலைவராக செயற்படவுள்ளார். முன்னதாக, இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவர் பதவியிலிருந்து தனஞ்சய டி சில்வா விலகுதாக அறிவித்திருந்தார்.

விபரங்களுக்கு
இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணித் தலைவர் பதவியிலிருந்து தனஞ்சய டி சில்வா விலகல்

இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணித் தலைவர் பதவியிலிருந்து தனஞ்சய டி சில்வா விலகல்

இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவர் தனஞ்சய டி சில்வா, அணித்தலைவர் பதவியில் இருந்து உடனடியாக விலகுவதாக அறிவித்துள்ளார்.ஸ்ரீலங்கா கிரிக்கெட் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி, அணித்தலைமை பொறுப்பை அடுத்த தலைமுறையிடம் ஒப்படைக்க வேண்டிய நேரம் இது என கருதுவதாக, தெரிவுக்குழுவுக்கு அனுப்பிய கடிதத்தில் தனஞ்சய டி சில்வா தெரிவித்துள்ளார்.எனினும், இலங்கை அணிக்காக வீரராக தொடர்ந்து விளையாட தான் தயாராக இருப்பதாகவும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.தனஞ்சய டி சில்வா டெஸ்ட் அணிக்கு வழங்கிய தலைமைத்துவத்திற்கு நன்றி தெரிவிப்பதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஆஷ்லி டி சில்வா தெரிவித்துள்ளார். அத்துடன், தனஞ்சய டி சில்வாவின் கிரிக்கெட் வாழ்க்கையின் எஞ்சிய காலத்திற்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விபரங்களுக்கு
22 ஆண்டுகால காத்திருப்புக்கு முடிவு: அரேபிய வளைகுடா கிண்ணத்தைக் கைப்பற்றியது சவுதி அரேபியா!

22 ஆண்டுகால காத்திருப்புக்கு முடிவு: அரேபிய வளைகுடா கிண்ணத்தைக் கைப்பற்றியது சவுதி அரேபியா!

அரேபிய வளைகுடா கிண்ணம் (Arabian Gulf Cup) கால்பந்து தொடரின் இறுதிப்போட்டியில் ஐக்கிய அரபு இராச்சியத்தை (UAE) 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, சவுதி அரேபிய அணி செம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் 22 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தக் கிண்ணத்தை சவுதி அரேபியா மீண்டும் தனது கைவசம் ஆக்கியுள்ளது. தொடக்கம் முதலே விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த இறுதிப்போட்டியில், சவுதி அரேபிய வீரர்கள் ஆதிக்கம் செலுத்தி இரு கோல்களை அடித்து அணியின் வெற்றியை உறுதி செய்தனர். சவுதி அரேபியா அணி இறுதியாக 2004ஆம் ஆண்டு அரேபிய வளைகுடா கிண்ணத்தைக் கைப்பற்றியிருந்தது. தற்போது நீண்ட ஆண்டுகால காத்திருப்புக்குப் பிறகு மீண்டும் இந்தக் கிண்ணத்தை வென்றுள்ளது. இறுதிப்போட்டியில் ஐக்கிய அரபு இராச்சிய அணி பதிலடி கொடுக்க முயன்ற போதிலும், சவுதி அணியின் வலுவான தடுப்பாட்டத்தை மீறி கோல் அடிக்க முடியாமல் போனது. இந்த வெற்றியின் மூலம் சவுதி அரேபிய அணி தனது வரலாற்றில் 4ஆவது முறையாக அரேபிய வளைகுடா கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது.

விபரங்களுக்கு
ICC  இருபதுக்கு 20 தரவரிசை: 18 இடங்கள் முன்னேறி 7ஆவது இடத்தைப் பிடித்தார் ஷ்ரேயஸ் ஐயர்!

ICC இருபதுக்கு 20 தரவரிசை: 18 இடங்கள் முன்னேறி 7ஆவது இடத்தைப் பிடித்தார் ஷ்ரேயஸ் ஐயர்!

சர்வதேச கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை (ICC) வெளியிட்டுள்ள புதிய இருபதுக்கு 20 துடுப்பாட்டவீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய அணியின் தலைவர் ஷ்ரேயஸ் ஐயர் 18 இடங்கள் அதிரடியாக முன்னேறி, 7ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதலாவது இருபதுக்கு 20 போட்டியில் லக்னோவில் 43 பந்துகளில் 102 ஓட்டங்கள் (10 நான்கு ஓட்டங்கள், 6 ஆறு ஓட்டங்கள்) பெற்று தனது முதல் சர்வதேச இருபதுக்கு 20 சதத்தைப் பதிவு செய்தார். இந்த அதிரடி ஆட்டத்தின் மூலம் தரவரிசையில் பெரும் ஏற்றத்தைக் அவர் ஏற்படுத்தியுள்ளார். ஷ்ரேயஸ் ஐயரின் இந்த முன்னேற்றத்தைத் தொடர்ந்து, ஐசிசி இருபதுக்கு 20 தரவரிசையின் முதல் 10 இடங்களில் தற்போது 4 இந்திய துடுப்பாட்டவீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இதன்படி, இஷன் கிஷன் முதல் இடத்திலும், அபிஷேக் சர்மா இரண்டாம் இடத்திலும், திலக் வர்மா 10ஆவது இடத்திலும் உள்ளனர். மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 1-0 என முன்னிலை வகிக்கும் நிலையில், ஷ்ரேயஸ் ஐயரின் இந்த வளர்ச்சி இந்திய அணிக்கு மேலும் வலுசேர்த்துள்ளது.

விபரங்களுக்கு
உலக விளையாட்டு அரங்கில் புதிய வரலாறு - 2036 ஒலிம்பிக் போட்டியை நடத்தப்போவது யார்?

உலக விளையாட்டு அரங்கில் புதிய வரலாறு - 2036 ஒலிம்பிக் போட்டியை நடத்தப்போவது யார்?

2036ஆம் ஆண்டுக்கான கோடைகால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்கான ஆரம்பக்கட்டப் போட்டியில் இந்தியா மற்றும் கட்டார் உள்ளிட்ட 7 நாடுகள் களமிறங்கியுள்ளதாக சர்வதேச ஒலிம்பிக் குழு உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.இந்தியா மற்றும் கட்டாருடன் ஜெர்மனி, ஹங்கேரி, துருக்கி, தென்னாபிரிக்கா மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளும் சர்வதேச ஒலிம்பிக் குழுவுடன் முதற்கட்டப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றன.சர்வதேச ஒலிம்பிக் குழு 2027 மார்ச் மாதத்தில் முதற்கட்டப் பட்டியலை தயாரிக்கும். 2028இல் முன்னுரிமை பெற்ற நாடுகள் அடையாளம் காணப்பட்டு, 2029ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் இறுதி முடிவு அறிவிக்கப்படும்.இந்தியா முதன்முறையாக ஒலிம்பிக் போட்டியை நடத்த முயற்சி செய்து வருகிறது. அஹமதாபாத் நகரை மையமாகக் கொண்டு இதற்கான திட்டமிடல்கள் நடைபெறுகின்றன. அஹமதாபாத் நகரம் 2030 பொதுநலவாய போட்டிகளையும் நடத்தவுள்ளது குறிப்பிடத்தக்கது.கட்டார், ஒலிம்பிக் போட்டியை நடத்தும் முதல் இஸ்லாமிய பெரும்பான்மை நாடு என்ற பெருமையைப் பெற முயல்கிறது.தென்னாபிரிக்கா, ஒலிம்பிக் போட்டியை நடத்தும் முதல் ஆபிரிக்க நாடு என்ற வரலாற்றுச் சாதனையைப் படைக்கப் போட்டியிடுகிறது.இந்த நிலையில் 2036 ஒலிம்பிக் போட்டிக்கான விருப்பத்தைத் தெரிவிக்க விருப்பமுள்ள ஏனைய நாடுகளுக்கு எதிர்வரும் 31ஆம் திகதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.அடுத்ததாக 2028 ஒலிம்பிக் போட்டிகள் அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சலஸ் நகரிலும், 2032 போட்டிகள் அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரிலும் நடைபெறவுள்ளன.

விபரங்களுக்கு
கால்பந்து ரசிகர்களுக்கு பேரதிர்ச்சி: மெஸ்ஸி எனும் மாபெரும் சகாப்தம் முடிவுக்கு வந்தது!

கால்பந்து ரசிகர்களுக்கு பேரதிர்ச்சி: மெஸ்ஸி எனும் மாபெரும் சகாப்தம் முடிவுக்கு வந்தது!

அர்ஜென்டினா கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி, சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 2026ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தில் தனது ஆறாவது உலகக் கிண்ணத் தொடரில் பங்கேற்ற மெஸ்ஸி, ஆர்ஜென்டினாவை இறுதிப் போட்டி வரை அழைத்துச் சென்றார். எனினும், இறுதிப் போட்டியில் ஸ்பெயினிடம் ஆர்ஜென்டினா தோல்வியடைந்தது. உலகக் கிண்ண இறுதிப் போட்டிக்குப் பின்னரே தேசிய அணியில் இருந்து ஓய்வு பெறும் முடிவை எடுத்ததாக தெரிவித்த மெஸ்ஸி, தனது தந்தையின் உடல்நிலை காரணமாக அதனைப் பொதுவெளியில் அறிவிப்பதை தாமதப்படுத்தியதாக கூறினார். “ஆர்ஜென்டினா அணிக்காக தான் அனைத்தையும் கொடுத்துவிட்டேன். இந்த அணியின் ஒரு பகுதியாக இருந்ததை எப்போதும் நேசிப்பேன். எனது சக வீரர்களுடன் இணைந்து ரசிகர்களுக்கு மறக்க முடியாத தருணங்களை வழங்கியதில் பெருமையடைகிறேன்” என மெஸ்ஸி தெரிவித்துள்ளார். மேலும், தமக்கு ஆதரவளித்த ரசிகர்கள், குடும்பத்தினர் மற்றும் சக வீரர்களுக்கு நன்றி தெரிவித்த அவர், “நன்றி கடவுளே, என்னை ஆர்ஜென்டினாவாக உருவாக்கியதற்கு. வாழ்க ஆர்ஜென்டினா!” என தனது அறிக்கையை நிறைவு செய்தார்.

விபரங்களுக்கு
Business Stories
Explore More
டயலொக் மற்றும் இந்திரா புற்றுநோய் அறக்கட்டளை இணைந்து 'Yeheli.lk' ஊடாக மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு

டயலொக் மற்றும் இந்திரா புற்றுநோய் அறக்கட்டளை இணைந்து 'Yeheli.lk' ஊடாக மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு

இலங்கையின் முதன்மைத் தொடர்புச் சேவை வழங்கி இலங்கையின் முதன்மைத் தொடர்புச் சேவை வழங்கி நிறுவனமான Dialog Axiata PLC, மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில், இந்திரா புற்றுநோய் அறக்கட்டளையுடன் (Indira Cancer Trust) இணைந்து தனது தலைமையகப் பணியகத்தை இளஞ்சிவப்பு (Pink) வண்ண விளக்குகளால் ஒளிரச் செய்துள்ளது. மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நபர்கள் மற்றும் குடும்பங்களுக்குத் தனது ஆதரவை வெளிப்படுத்தவும், இது குறித்த விழிப்புணர்வு, வழக்கமான மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் ஆரம்பகட்டக் கண்டறிதலை ஊக்குவிக்கவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.டயலொக் நிறுவனத்தின் 'Yeheli.lk டிஜிட்டல் தளம் வழியாக இந்திரா புற்றுநோய் அறக்கட்டளையுடன் இணைந்து முன்னெடுக்கப்படும் இத்தகைய விழிப்புணர்வுப் பிரசாரங்களின் தொடர்ச்சியாக, இந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் முழுவதும் ‘இதயத்திலிருந்து ஒரு உறுதிமொழி’ (A Pledge from the Heart) எனும் தொனிப்பொருளில் விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இதன்கீழ், பொதுமக்கள் yeheli.lk தளத்திற்குச் சென்று, மார்பகப் புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிவதற்கான இலவச மாதாந்திர எஸ்.எம்.எஸ் நினைவூட்டல்களைப் பெறப் பதிவுசெய்து, தங்களது உறுதிமொழியையும் எடுத்துக்கொள்ள முடியும். நம்பகமான மற்றும் மருத்துவ நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டத் தகவல்களைப் பொதுமக்களுக்கு எளிதில் கிடைக்கச் செய்வதன் மூலம், மார்பக ஆரோக்கியம் குறித்த திறந்த உரையாடல்களை ஊக்குவிப்பதுடன், சுய மார்பகப் பரிசோதனைகள் மற்றும் ஆரம்பகட்டக் கண்டறிதலின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதையும் இந்த திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.இந்த நிகழ்வில் இந்திரா புற்றுநோய் அறக்கட்டளையின் தலைவரும் அறங்காவலருமான மருத்துவர் லங்கா ஜயசூரிய திசாநாயக்க மற்றும் இலங்கை புற்றுநோயியல் நிபுணர்கள் கல்லூரியின் (SLCO) தலைவர் மருத்துவர் சஞ்சீவ குணசேகர ஆகியோருடன் Dialog Axiata PLC நிறுவனத்தின் சார்பில் பணிப்பாளர் / குழும முதன்மை நிறைவேற்று அதிகாரி சுபுன் வீரசிங்க, குழும முதன்மை நிறுவன அதிகாரி அசங்க பிரியதர்ஷன, குழும முதன்மை மனிதவள அதிகாரி ரேகா வீரசூரிய மற்றும் குழும முதன்மை நிதி அதிகாரி சிம் சியூ ஷான் ஆகியோரும் கலந்துகொண்டனர்.இது குறித்து இந்திரா புற்றுநோய் அறக்கட்டளையின் தலைவரும் அறங்காவலருமான மருத்துவர் லங்கா ஜயசூரிய திசாநாயக்க தெரிவிக்கையில், “மார்பகப் புற்றுநோய் சிகிச்சையின் முடிவுகளை மேம்படுத்துவதில் ஆரம்பகட்டக் கண்டறிதல் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது.எனவே தொடர்ச்சியான விழிப்புணர்வும், துல்லியமான தகவல்களைப் பெறுவதும் அவசியமாகிறது. டயலொக் நிறுவனத்துடனான எங்களது தொடர் பங்களிப்பானது, Yeheli.lk தளம் வழியாக அதிகமான மக்களைச் சென்றடையவும்; பெண்கள், அவர்தம் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களை மார்பக ஆரோக்கியம் குறித்துக் கவனத்துடன் செயல்படவும், வழக்கமான பரிசோதனைகளை மேற்கொண்டு தேவையான நேரத்தில் உரிய மருத்துவ ஆலோசனைகளைப் பெறவும் ஊக்குவிக்கிறது எனக் குறிப்பிட்டார்.Dialog Axiata PLC நிறுவனத்தின் குழும முதன்மை நிறுவன அதிகாரி அசங்க பிரியதர்ஷன தெரிவிக்கையில்,இந்திரா புற்றுநோய் அறக்கட்டளையுடனான எங்களது கூட்டுப்பணி, தொழில்நுட்பம் மற்றும் நம்பகமான பங்களிப்புகள் மூலம் முக்கிய ஆரோக்கியத் தகவல்களை எளிதில் கிடைக்கச் செய்து சமூக நிலைத்தன்மையை மேம்படுத்துவதற்கான டயலொக்கின் அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கிறது. இந்த மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தில், Yeheli.lk தளம் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு மட்டுமன்றி, நிபுணர்களால் சரிபார்க்கப்பட்ட தகவல்கள் மற்றும் வழக்கமான நினைவூட்டல்கள் மூலம் மக்கள் சரியான நேரத்தில் தகுந்த நடவடிக்கை எடுக்க வழிவகை செய்கிறோம். இதயத்திலிருந்து ஒரு உறுதிமொழி பிரசாரத்தின் மூலம், சமூகம் முழுவதும் விழிப்புணர்வு மற்றும் ஆரம்பக்கட்டக் கண்டறிதலைத் தொடர்ச்சியாக ஊக்குவிக்க நம்புகிறோம் எனக் கூறினார்.சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் இயங்கும் இலங்கையின் முதலாவது anonymous டிஜிட்டல் ஆலோசனைத் தளமான Yeheli.lk, ஆரோக்கியம், சட்டம் மற்றும் உளவியல் சமூக விவகாரங்கள் குறித்து நிபுணர்களால் சரிபார்க்கப்பட்ட ஆலோசனைகளை வழங்குகிறது. பகிரங்கமாகப் பேசக் கடினமாக இருக்கும் தலைப்புகள் குறித்து பாதுகாப்பான முறையில் தகவல்களைப் பெற இத்தளம் வழிவகுக்கிறது. மேலும், இதில் உள்ள AI தொழில்நுட்பத்தில் இயங்கும் Chat & Voice Bot மூலம் 24 மணிநேரமும் இலவசமாகவும் இரகசியமாகவும் ஆலோசனைகளைப் பெற முடியும். ‘இதயத்திலிருந்து ஒரு உறுதிமொழி’ முன்னெடுப்பின் மூலம், மார்பக ஆரோக்கியம் பற்றிய உரையாடலை ஒக்டோபர் மாதத்தைத் தாண்டியும் கொண்டு சென்று, பொதுமக்கள் நம்பகமான வழிகாட்டுதல்களைப் பெறவும், விழிப்புணர்வுடன் செயல்பட்டுத் தங்களது ஆரோக்கியத்திற்காக உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்கவும் டயலொக் மற்றும் இந்திரா புற்றுநோய் அறக்கட்டளை இணைந்து பணியாற்றுகின்றன. மேலதிக விவரங்களுக்கு www.yeheli.lk என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம்.

விபரங்களுக்கு
2026 ஆசிய விளையாட்டு விழாவுக்குச் செல்லும் இலங்கை அணிக்கு Dialog Axiata PLC அனுசரணை

2026 ஆசிய விளையாட்டு விழாவுக்குச் செல்லும் இலங்கை அணிக்கு Dialog Axiata PLC அனுசரணை

Dialog Axiata PLC, 2026 ஐச்சி-நகோயா ஆசிய விளையாட்டு விழாவில் பங்கேற்கவுள்ள இலங்கை வீரர், வீராங்கனைகள் அடங்கிய அணிக்கு அனுசரணை வழங்கியுள்ளது.இலங்கை தேசிய ஒலிம்பிக் குழுவுடன் இணைந்து, ஆசிய விளையாட்டு விழாவில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வீரர், வீராங்கனைகளுக்கு இந்த அனுசரணை வழங்கப்படுவதாக Dialog Axiata PLC தெரிவித்துள்ளது.பல தசாப்தங்களாக இலங்கையின் விளையாட்டுத்துறைக்கு ஆதரவளித்து வரும் Dialog Axiata PLC, 2028ஆம் ஆண்டு வரை இலங்கை தேசிய ஒலிம்பிக் குழுவின் உத்தியோகபூர்வ தொலைத்தொடர்பு பங்காளராகவும் செயற்பட்டு வருகிறது.2028 லொஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டிகளை நீண்டகால இலக்காகக் கொண்டு, நாட்டின் விளையாட்டுத்துறையை மேம்படுத்துவதற்கான விரிவான திட்டங்களின் ஒரு பகுதியாக இந்த அனுசரணை வழங்கப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.2026 ஐச்சி-நகோயா ஆசிய விளையாட்டு விழாவில் இலங்கை வீரர், வீராங்கனைகள் பெறும் அனுபவங்கள், அந்த இலக்கை நோக்கிய பயணத்தில் முக்கியமான ஒரு படியாக அமையும் என Dialog Axiata PLC தெரிவித்துள்ளது.மேலும், கிரிக்கெட், கரப்பந்தாட்டம் மற்றும் மின்னணு விளையாட்டுகள் (Esports) ஆகிய தேசிய அணிகளின் பிரதான அனுசரணையாளராகவும் Dialog Axiata PLC செயற்பட்டு வருகிறது.தேசிய பரா விளையாட்டு விழா மற்றும் பரா ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் இலங்கை அணிகளுக்கும் நிறுவனம் ஆதரவு வழங்கி வருவதுடன், இலங்கை ஓபன் கோல்ஃப் போட்டி மற்றும் பரா ஒலிம்பிக் விளையாட்டுத்துறைக்கும் பிரதான அனுசரணையை வழங்கி வருகிறது.அத்துடன், எதிர்காலத்தில் செம்பியன்களை உருவாக்கும் நோக்கில், ஜனாதிபதி தங்கக் கிண்ண கரப்பந்தாட்டப் போட்டி, தேசிய கனிஷ்ட மற்றும் சிரேஷ்ட வலைப்பந்தாட்டப் போட்டிகள் மற்றும் பாடசாலை ரக்பி போட்டிகள் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு நிகழ்வுகளுக்கும் Dialog Axiata PLC ஆதரவு வழங்கி வருகிறது.இலங்கை தேசிய ஒலிம்பிக் குழுவின் உத்தியோகபூர்வ தொடர்பாடல் பங்காளராக, 2028 லொஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டிகளை நோக்கிய இலங்கையின் பயணத்திற்கும் Dialog Axiata PLC ஆதரவு வழங்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபரங்களுக்கு
10 பில்லியன் டொலரைத் தாண்டிய இலங்கையின் ஏற்றுமதி வருமானம்!

10 பில்லியன் டொலரைத் தாண்டிய இலங்கையின் ஏற்றுமதி வருமானம்!

இலங்கையின் ஏற்றுமதித் துறை 2026 ஆம் ஆண்டில் தொடர்ந்து வலிமையான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதுடன், ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் மொத்த ஏற்றுமதி வருமானம் 10 பில்லியன் அமெரிக்க டொலர்களைத் தாண்டியுள்ளதாக ஏற்றுமதி அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது.அதன்படி, 2026 ஜனவரி முதல் ஜூலை வரையிலான காலப்பகுதியில் பொருட்கள் மற்றும் சேவைகள் மூலம் ஈட்டப்பட்ட மதிப்பிடப்பட்ட மொத்த ஏற்றுமதி வருமானம் 10.49 பில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளது. இது 2025 ஆம் ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது 5.5 சதவீத அதிகரிப்பாகும்.ஒட்டுமொத்த ஏற்றுமதிச் செயல்பாட்டிற்குப் பொருட்கள் ஏற்றுமதியே அதிக பங்களிப்பை வழங்கி வந்துள்ளது. ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் இந்தத் துறை 8.19 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை ஈட்டியுள்ளதுடன், இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது 5.05 சதவீத அதிகரிப்பாகும். இலங்கை சுங்கத் திணைக்கத்தால் வெளியிடப்பட்ட தற்காலிகத் தரவுகள் மற்றும் இரத்தினக்கல் மற்றும் ஆபரணத்துறை மற்றும் பெட்ரோலியப் பொருட்கள் தொடர்பான மதிப்பிடப்பட்ட ஏற்றுமதி மதிப்புகளின் அடிப்படையில், 2026 ஜூலை மாதத்தில் இலங்கையின் பொருட்கள் ஏற்றுமதி 1.29 பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்தது. எனினும், இது 2025 ஜூலை மாதத்துடன் ஒப்பிடும்போது 1.3 சதவீத சிறிய வீழ்ச்சியைக் குறிக்கிறது.இதற்கிடையில், சேவை ஏற்றுமதித் துறையும் தனது நேர்மறையான வளர்ச்சி வேகத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது. ஜனவரி முதல் ஜூலை வரையிலான காலகட்டத்தில் இந்தத் துறை 2.3 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிடப்பட்ட வருமானத்தைப் பதிவு செய்துள்ளது. இது முந்தைய ஆண்டைக் காட்டிலும் 7.02 சதவீத அதிகரிப்பாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சேவை ஏற்றுமதியானது தொடர்ந்து விரிவடைந்து, 2026 ஜூலை மாதத்தில் சுமார் 351.92 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஈட்டியுள்ளதுடன், இது கடந்த ஆண்டின் இதே மாதத்துடன் ஒப்பிடும்போது 3.75 சதவீத அதிகரிப்பாகும்.இதன் விளைவாக, 2026 ஜூலை மாதத்தில் பொருட்கள் மற்றும் சேவைகள் இரண்டின் மூலமான இலங்கையின் ஒருங்கிணைந்த ஏற்றுமதி வருமானம் சுமார் 1.64 பில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

விபரங்களுக்கு
சுத்தமாக்கப்பட்ட சிவனொளிபாதமலை : சியபத பினான்ஸின் பசுமை முன்னெடுப்பு திட்டம்

சுத்தமாக்கப்பட்ட சிவனொளிபாதமலை : சியபத பினான்ஸின் பசுமை முன்னெடுப்பு திட்டம்

இலங்கையின் முன்னணி நிதி நிறுவனமான சியபத பினான்ஸ் பிஎல்சி, தனது 21ஆவது ஆண்டு நிறைவு மற்றும் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்திருந்த '2026 சிவனொளிபாதமலை சுத்திகரிப்பு திட்டம்' வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. கடந்த ஜூன் 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டது. சியபத பினான்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மதிஷ ஹேவவித்தாரண மற்றும் சிரேஷ்ட நிர்வாகக் குழுவின் தலைமையில், 50-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் இந்தத் தூய்மைப் பணியில் ஈடுபட்டனர். இதன்போது ஒரே நாளில் சுமார் ஒரு டொன் அளவிலான பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிக்கப்பட்டது. அத்துடன் புனித ஸ்தலத்தைப் பாதுகாப்பதற்கான கழிவு முகாமைத்துவம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமான சிவனொளிபாதமலை சரணாலயம், நாட்டின் அபூர்வ தாவரங்கள், விலங்கினங்கள் மற்றும் களனி, களு, வளவை ஆகிய முக்கிய ஆறுகளின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளைக் கொண்டுள்ள சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த இடமாகும். அதிகரித்து வரும் யாத்ரீகர்களின் வருகையால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகளைக் குறைப்பதே இந்த திட்டத்தின் பிரதான நோக்கமாகும். சிவனொளிபாதமலை முதன்மை தலைமைத் துறவி பெங்கமுவே தம்மதின்ன தேரரின் வழிகாட்டுதலின் கீழ், மஸ்கெலிய பிரதேச சபை, வனவிலங்கு பாதுகாப்புத் துறை மற்றும் நல்லதண்ணி காவல்துறை ஆகியவற்றின் முழுமையான ஆதரவுடன் இந்த கூட்டுப் பாதுகாப்பு முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

விபரங்களுக்கு
பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் சாதனை படைத்த வீரர்களுக்கு டயலொக் நிறுவனம் சிறப்பு கௌரவம்

பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் சாதனை படைத்த வீரர்களுக்கு டயலொக் நிறுவனம் சிறப்பு கௌரவம்

இலங்கையின் முதன்மைத் தொலைத்தொடர்புச் சேவை வழங்கியும் விளையாட்டுத்துறையின் பிரதான அனுசரணையாளருமான Dialog Axiata PLC நிறுவனம், இந்தமுறை பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் இலங்கைக்குப் பெருமை சேர்த்த வீரர்களைச் சிறப்பாகக் கெளரவித்துள்ளது.இதற்கமைய, நேற்று (05) இடம்பெற்ற பொதுநலவாய விளையாட்டு வீரர்களுக்கான மக்கள் வரவேற்பு வீதிப் பேரணியின் போது, Dialog Axiata PLC நிறுவனத்தின் தலைமை அலுவலக வளாகத்தில் இந்த கௌரவிப்பு நிகழ்வு நடைபெற்றது.பொதுநலவாய விளையாட்டு வரலாற்றில் தடகளப் பிரிவில் இலங்கைக்காக முதன்முறையாகத் தங்கம் வென்ற ருமேஷ் தரங்க மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற பாலித பண்டார ஆகியோருக்கு, Dialog Axiata PLC நிறுவனத்தின் குழுமத் தலைமைச் செயல் அதிகாரி சுபுன் வீரசிங்கவினால் சிறப்புப் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.2028 லொஸ் ஏஞ்சலஸ் ஒலிம்பிக் போட்டி வரை இலங்கை தேசிய ஒலிம்பிக் குழுவின் உத்தியோகபூர்வ தொலைத்தொடர்பு பங்காளியாகச் செயற்படும் டயலொக் நிறுவனம், நாட்டின் முதன்மை ஒலிம்பிக் எதிர்பார்ப்பான ருமேஷ் தரங்க உள்ளிட்ட திறமையாளர்களையும், மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுத்துறையின் முதன்மை அனுசரணையாளராகப் பாலித பண்டார உள்ளிட்ட விளையாட்டு வீரர்களையும் தொடர்ந்து பலப்படுத்த அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றது.

விபரங்களுக்கு
 ஒப்பற்ற எரிபொருள் சிக்கனத்துடன் இலங்கையின் வீதிகளை அலங்கரிக்கவுள்ள TVS Sport 110

ஒப்பற்ற எரிபொருள் சிக்கனத்துடன் இலங்கையின் வீதிகளை அலங்கரிக்கவுள்ள TVS Sport 110

நாட்டில் உயர் ரக மோட்டார் வாகன விநியோக நிறுவனமாகத் திகழ்ந்து வருகின்ற TVS Lanka (Pvt) Ltd, இலங்கை மக்களுக்கு ஒப்பற்ற எரிபொருள் சிக்கனம் மற்றும் நம்பிக்கையான புதிய சகாப்தொன்றுக்கு வழிவகுத்துள்ளது. அந்த வகையில், புத்தம் புதிய TVS Sport 110 மோட்டார் சைக்கிள்களை உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளமை குறித்து சமீபத்தில் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.உலகளவில் அங்கீகாரம் பெற்ற TVS Sport 110 மோட்டார் வாகனத்தின் புதிய வடிவமைப்புப்பானது பிரயாணத் துறையில் திருப்புமுனையை ஏற்படுத்தும் ஆற்றல் மிக்கது. ஒப்பற்ற எரிபொருள் சிக்கனம் மற்றும் நவீன வடிவமைப்புடன் மேம்பட்ட செயல்திறனுடன் இலங்கையின் மோட்டார் சைக்கிள் ஓட்டுனர்களுக்காக சிறப்பாகத் தயாரிக்கப்பட்டுள்ளது. 'மைலேஜ் கிங்' (Mileage King) என பிரபலமாக அறியப்படுகின்ற TVS Sport 110, எரிபொருள் பாவனையில் சிக்கனம் கொண்ட 109.7cc Duralife இயந்திரத்தைக் கொண்டது. 100cc இயந்திர வலுப் பிரிவில் TVS Motor நிறுவனத்தின் காப்புரிமை பெற்ற ET-Fi (Eco-Thrust Fuel Injection) தொழில்நுட்பத்தைக் கொண்ட முதலாவது மற்றும் ஒரேயொரு மோட்டார் சைக்கிள் இது மாத்திரமே என்பது சிறப்பம்சம். இந்த மேம்பாடானது எரிபொருள் பாவனையின் சிக்கனத்தை 15% ஆல் அதிகரிக்கச் செய்துள்ளதுடன், லிட்டருக்கு 80 கிமீ என்ற ஒப்பற்ற மைலேஜ் பாவனைக்கும் வழிவகுத்துள்ளது. சீரான இயந்திர வலுவைக் கொண்டுள்ளதுடன், நீண்ட நேரம் அணைத்து வைக்கப்பட்ட இயந்திரத்தை சிறப்பாக மீண்டும் இயக்கும் இயல்பானது.புத்தாக்கமிக்க பக்கவாட்டு ஸ்டாண்ட் குறியீடு, பக்கவாட்டு ஸ்டாண்ட் போடப்படும் போது தானாகவே அணைந்து விடும் இயந்திரம் ஆகிய தொழில்நுட்பங்களை இப்புதிய TVS Sport 110 மோட்டார் சைக்கிள்கள் கொண்டுள்ளன. பிரேக்குகளைப் பிரயோகிக்கும் போது உறுதிப்பாட்டை மேம்படுத்துவதற்கு 'synchronised braking technology' (SBT) என்ற தொழில்நுட்பத்தையும் அது கொண்டுள்ளது. பின்புறத்தில் சீர் செய்யக்கூடிய ஐந்து படிப்புக்கொண்ட hydraulic shock absorber மற்றும் சோர்வில்லாத நீண்டதூரப் பயணத்திற்கென பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட ஆசனங்கள் ஆகிய சிறப்பம்சங்களையும் இது கொண்டுள்ளது.“இலங்கையில் மோட்டார் சைக்கிள் பிரயாணிகள் இரண்டு அடிப்படை விடயங்களுக்கு தற்போது முன்னுரிமையளித்து வருகின்றனர். மிக நீண்ட கால உழைப்பு மற்றும் உச்ச எரிபொருள் சிக்கனம் ஆகியவற்றுக்கு அவர்கள் முதலிடம் அளிக்கின்றனர். TVS Sport 110 மோட்டார் சைக்கிளை அறிமுகப்படுத்தி அவர்களின் எதிர்பார்ப்புக்களை நாம் நிறைவேற்றியுள்ளோம். இதை வெறுமனே ஒரு வாகனம் என்று கூறிவிடுவதன் நின்று விட முடியாது. எரிபொருள் செலவுகள் அதிகரித்துச் செல்லும் நிலையில், தரம் மற்றும் அழகிய தோற்றம் ஆகியவற்றிற்கு எவ்விதமான குறைவுமின்றி தமது பிரயாணங்களை மேற்கொள்ள விரும்புகின்ற கடின உழைப்பாளிகள் மற்றும் அன்றாடம் பிரயாணிப்பவர்களுக்கான உகந்த தீர்வாக இது காணப்படுகின்றது.” என்று TVS Lanka (Pvt) Ltd நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி திரு. கீதால் அந்தனி அவர்கள் கருத்து தெரிவித்தார்.அதிநவீன தோற்றத்தைக் கொண்டுள்ள TVS Sport 110 மோட்டார் சைக்கிள்கள் உயர்ரக 3D chrome இலச்சினைகள், பளபளப்பான தோற்றத்தைக் கொண்ட LED DRL விளக்குகள், மற்றும் புதுப்பிக்கப்பட்ட டிஜிட்டல்-அனலொக் கட்டுப்பாட்டு முகத்திரை போன்ற சிறப்பம்சங்களையும் இது கொண்டுள்ளது. இலங்கையின் பல்வேறுபட்ட வீதி அமைப்புக்களுக்கு உகந்ததாக தரைக்கும், மோட்டார் சைக்கிளின் அடிப்பாகத்திற்கும் இடையில் 175 மிமீ தாராள இடைவெளியையும் கொண்டுள்ளது.கருப்பு நியோன் மற்றும் பழுப்பு சிவப்பு உள்ளிட்ட பல்வேறு வர்ணங்களில் TVS Sport 110 மோட்டார் சைக்கிள் வெளிவருவதுடன், TVS Lanka நாடளாவிய ரீதியில் கொண்டுள்ள பரந்தளவிலான வலையமைப்பினூடாக கிடைக்கப்பெறுகின்றது.“மிகச் சிறந்த வாகனத்தை வழங்குவதற்கும் அப்பால், சந்தையில் மிகக் குறைந்த தொகையில் அதனை சொந்தமாக்கிக் கொள்ள உறுதி செய்வதிலும் நாம் அர்ப்பணிப்புடன் உள்ளோம். உதிரிப்பாகங்களை இலகுவில் பெற்றுக்கொள்வதற்கு ஏதுவாக நாடெங்கிலும் 400 க்கும் மேற்பட்ட வலையமைப்பு மையங்களை நாம் நிறுவியுள்ளோம். அவற்றினூடாக சந்தையில் அசல் உதிரிப்பாகங்களை மிகவும் சிக்கனமாக ஆகக் குறைந்த விலைகளில் நாம் வழங்குகின்றோம். உதிரிப்பாகங்கள் 100% கிடைப்பதை TVS Lanka உறுதிப்படுத்துவதுடன், அசல் பாகங்கள் அனைத்திற்கும் முழுமையான உத்தரவாதத்தையும் வழங்குகின்றது. எம்மிடம் மோட்டார் சைக்கிள்களை வாங்குபவர்கள் முழுமையான மன நிம்மதியுடன், தங்குதடையின்றி போக்குவரத்து செய்வதை நாம் உறுதி செய்கின்றோம்,” என்று TVS Lanka நிறுவனத்தின் சந்தைப்படுத்தலுக்கு பின்னரான செயல்பாடுகளுக்கான உதவிப் பொது மேலாளர் இந்திக புஷ்பகுமார அவர்கள் கருத்து தெரிவித்தார்.ஐந்து ஆண்டுகள் அல்லது 76,000 கிமீ என்ற முழுமையான உத்தரவாதம், உதிரிப்பாகங்களை குறைந்த விலைகளில் தங்குதடையின்றி பெற்றுக்கொள்ளல், மற்றும் விற்பனைக்குப் பின்னரான சேவைகளை வழங்குவதற்கான பிரத்தியேக அணி ஆகியவற்றின் பக்கபலத்துடன், மோட்டார் சைக்கிள் துறையில் வாடிக்கையாளர்களைத் திருப்திப்படுத்துவதில் சிறந்த தரத்தரங்களை TVS Lanka நிறுவனம் தொடர்ந்தும் நிலைநாட்டி வருகின்றது.உங்களுக்கு அருகாமையிலுள்ள TVS காட்சி அறைக்கு வருகை தந்தோ அல்லது www.tvslanka.lk என்ற இணையத்தளம் மூலமாகவோ, அல்லது 0114 600 500 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தியோ மேலதிக விபரங்களை அறிந்து கொள்ள முடியும்.TVS Lanka (Pvt) Ltd நிறுவனம் தொடர்பான விபரங்கள்இந்தியாவைத் தளமாகக் கொண்ட TV Sundram Iyengar and Sons (Pvt) Ltd நிறுவனத்தின் முழுமையான உரிமையாண்மையின் கீழ் ஒரு துணை நிறுவனமாக TVS Lanka (Pvt) Ltd இயங்கி வருகிறது. இரு தசாப்தங்களுக்கும் மேலாக இலங்கையில் மோட்டார் வாகனத் துறையில் நம்பிக்கைக்குரிய நாமமாக விளங்குகின்றது. புத்தாக்கம் மற்றும் மகத்துவம் ஆகியவற்றுக்கு இது பெயர்பெற்றுள்ளதுடன், தனது வரலாற்றில் பல அங்கீகாரங்களையும், பாராட்டுக்களையும் அது சம்பாதித்துள்ளது. TVS வர்த்தகநாமம் மற்றும் பல்வேறுபட்ட வர்த்தகநாமங்களின் UCAP சேவைகளுக்கான பிரத்தியேக சேவை மையங்களை TVS Lanka இயக்கி வருகின்றது. நாடெங்கிலும் 2,000 க்கும் மேற்பட்ட முகவர் மையங்களுடன், நாடளவில் வாடிக்கையாளர்களுக்கு தொடர்ச்சியான தரம் மற்றும் இலகுவாக கிடைக்கப்பெறுதல் ஆகியவற்றை TVS Lanka உறுதி செய்து வருகின்றது.

விபரங்களுக்கு
டேவிட் பீரிஸ் பஜாஜ் ஸ்கூட்டர் மீண்டும் புதிய பரிமாணத்தில்

டேவிட் பீரிஸ் பஜாஜ் ஸ்கூட்டர் மீண்டும் புதிய பரிமாணத்தில்

டேவிட் பீரிஸ் குரூப் ஒஃப் கம்பனிஸ் நிறுவனத்தின் மின்சார வாகனப் பிரிவான டேவிட் பீரிஸ் E-Mobility (பிரைவேட்) லிமிடெட், Bajaj Chetak ஸ்கூட்டரை பெருமையுடன் மீள அறிமுகம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது.    இதன் மூலம் இலங்கையின் மிகவும் பிரபலமான ஸ்கூட்டர் வர்த்தக நாமங்களில் ஒன்றான Chetak, மின்சார யுகத்திற்கு ஏற்றவாறு புதிய பரிமாணத்தில் மீண்டும் களமிறங்கியுள்ளது.    1978 ஆம் ஆண்டு முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட Bajaj Chetak, மிக விரைவாக இல்லங்கள் தோறும் இடம்பிடித்த ஒரு பெயராக மாறியதுடன், நாடு முழுவதும் உள்ள பல தலைமுறை பயணிகளின் நம்பிக்கையையும் வென்றெடுத்தது.    ஜப்பானிய மோட்டார் சைக்கிள்கள் ஆதிக்கம் செலுத்திய காலப்பகுதியிலும் கூட, Chetak ஸ்கூட்டர்களுக்கான கேள்வி அதிகரித்துக் காணப்பட்டது.    இது இலங்கை நுகர்வோர் மத்தியில் காணப்பட்ட ஈடிணையற்ற நம்பகத்தன்மையையும் உணர்வுப்பூர்வமான பிணைப்பையும் உறுதிப்படுத்துகிறது.    47 ஆண்டுகால புகழ்பெற்ற வரலாற்றைக் கொண்ட Chetak, தற்போது அதே நம்பிக்கையுடனும் நீடித்து உழைக்கும் தன்மையுடனும் நவீன மின்சார தொழில்நுட்பத்தின் மேம்பட்ட வசதிகளுடன் மீண்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.    நவீன நகரப் போக்குவரத்துக்காக வடிவமைக்கப்பட்டுள்ள Bajaj Chetak Electric Scooter, 3.1 kW hub motor மற்றும் 3.5 kWh lithium-ion பற்றரியைக் கொண்டுள்ளது.    இது ஒருமுறை சார்ஜ் செய்தால் 151 கி.மீ (IDC range) வரை பயணிக்கக்கூடிய சிறப்பான செயல்திறனை வழங்குகிறது.    அத்துடன், மணித்தியாலத்திற்கு 63 கி.மீ வேகத்தில் பயணிக்கக்கூடிய இந்த ஸ்கூட்டர், ஆற்றல், வினைத்திறன் மற்றும் அன்றாட பயன்பாட்டிற்கான வசதி ஆகியவற்றுக்கிடையே ஒரு சிறந்த சமநிலையை வழங்குகிறது.    வலுவான Steel Unibody கட்டமைப்பைக் கொண்டுள்ள Chetak, உயர்தரமான பயண அனுபவத்தையும் நீண்டகால நீடித்து உழைக்கும் தன்மையையும் வழங்குவதன் மூலம் தனது பிரிவில் உள்ள ஏனைய வாகனங்களிலிருந்து தனித்து நிற்கிறது.    அத்துடன், தனது பிரிவிலேயே ஆகக்கூடிய அளவான 35 லீற்றர் Under-seat storage வசதியையும் கொண்டுள்ளமையால், அன்றாடப் பயணம் மற்றும் நவீன நகர வாழ்க்கை முறைக்கு இது ஒரு மிகச்சிறந்த தெரிவாக அமைகிறது.    சந்தையில் உள்ள ஏனைய போட்டியாளர்களுடன் ஒப்பிடுகையில், Bajaj Chetak அதிக ஆற்றலையும், சிறந்த பயணத் தூரத்தையும் வழங்குகிறது.    இந்த ஸ்கூட்டர், முழுமையான Digital display, புளூடூத் ஊடாக இணைக்கப்படக்கூடிய App connectivity, Eco மற்றும் Sports ஆகிய இரண்டு Riding modes போன்ற பல நவீன வசதிகளைக் கொண்டுள்ளது.    அத்துடன், Hill Hold Assist, Reverse mode, Music and call notifications போன்ற வசதிகள் உள்ளடக்கப்பட்டுள்ளதால், இது ஒரு சௌகரியமான மற்றும் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய பயண அனுபவத்தை உறுதி செய்கிறது.    இந்த அறிமுகத்திற்கு முன்னதாகவே, விற்பனை, சேவை மற்றும் உதிரிப்பாகங்கள் விநியோகம் ஆகியவற்றை உள்ளடக்கிய சுமார் 2,000 நாடளாவிய விற்பனை மற்றும் சேவை நிலையங்களில், பரிசோதனை உபகரணங்கள், கண்டறியும் ஸ்கானர்கள், பயிற்சி பெற்ற சேவை நிபுணர்கள் மற்றும் உதிரிப்பாகங்கள் உள்ளிட்ட பிரத்தியேக வசதிகளை DPMC நிறுவனம் ஏற்படுத்தியுள்ளது.    இதன் மூலம், வாடிக்கையாளர்கள் நாட்டின் எந்தப் பகுதியில் இருந்தாலும் அவர்களுக்கு ஈடிணையற்ற ஆதரவையும் இலகுவான அணுகலையும் வழங்குவதை நிறுவனம் உறுதி செய்கிறது.    டேவிட் பீரிஸ் E-Mobility நிறுவனமானது, Bajaj Chetak ஸ்கூட்டரின் தரம், நீடித்து உழைக்கும் தன்மை மற்றும் செயல்திறன் ஆகியவற்றை உறுதிப்படுத்துவதற்காக, இலங்கையின் அனைத்து வகையான நிலப்பரப்புகளிலும் 20,000 கிலோமீற்றர்களுக்கும் அதிகமான தூரம் சோதனைகளை மேற்கொண்டுள்ளது.    இந்த வெற்றிகரமான களப்பரிசோதனைகளின் பின்னரே இலங்கைச் சந்தைக்கு அறிமுகப்படுத்தப்படுகிறது.    டேவிட் பீரிஸ் குழுமத்தின் விரிவான நாடளாவிய விற்பனைக்குப் பிந்தைய சேவை வலையமைப்பானது வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை மேலும் பலப்படுத்துவதுடன், நம்பகத்தன்மை மற்றும் வாடிக்கையாளர் நலன் மீதான அக்குழுமத்தின் நீண்டகால அர்ப்பணிப்பையும் மீண்டும் உறுதிப்படுத்துகிறது.    அத்துடன், Bajaj Chetak பயனர்களுக்கு இலங்கையின் முதலாவது இரு சக்கர வாகனங்களுக்காக வழங்கப்படும் 24/7 வீதியோர அவசர உதவிச் சேவை வழங்கப்படுவதால், எவ்வித கவலையுமின்றி மனநிம்மதியுடன் பயணிக்க முடியும்.    வாடிக்கையாளர் டேவிட் பீரிஸ் E-Mobility ஐ 011 470 0550எனும் ஹொட்லைன் ஊடாக தொடர்பு கொள்ள முடியும்.    24/7 வீதியோர அவசர உதவிச் சேவையை 011 4 700 551 ஊடாக பெற முடியும்.    Chetak காட்சியறை இல. 08, பன்னிபிட்டிய வீதி, பத்தரமுல்ல எனும் முகவரியில் அமைந்துள்ளது.    Bajaj Chetak அறிமுகத்துடன், டேவிட் பீரிஸ் E-Mobility (பிரைவட்) லிமிடெட், இலங்கையை நிலைபேறான மற்றும் முன்னணி மின்சார போக்குவரத்து முறைமைக்கு கொண்டு செல்லும் செயற்பாடுகளை துரிதப்படுத்துவதுடன், பல தலைமுறைகளின் விருப்பத்திற்குரிய தெரிவை, எதிர்காலத்திற்கு பொருத்தமான வகையில் கொண்டு வந்துள்ளது.

விபரங்களுக்கு
தலைமை நிர்வாக அதிகாரியாக மதிஷ ஹேவாவிதாரண நியமனம்

தலைமை நிர்வாக அதிகாரியாக மதிஷ ஹேவாவிதாரண நியமனம்

சியபத பினான்ஸ் தடையற்ற தலைமைத்துவ மாற்றத்தை அறிவித்துள்ளது.    தலைமை நிர்வாக அதிகாரியாக மதிஷ ஹேவாவிதாரண நியமனம் பெற்றதுடன் ஆனந்த செனவிரத்ன நிர்வாக இயக்குநராக தனது பதவிக் காலத்தை நிறைவு செய்கிறார்.    2026 ஜனவரி 1, முதல் தலைமை நிர்வாக அதிகாரியாக மதிஷ ஹேவாவிதாரண நியமிக்கப்பட்டுள்ளார்.    இந்த நியமனம் சியபதவின் உள்ளக திறமை மேம்பாட்டிற்கான உறுதிப்பாட்டில் ஒரு மைல்கல்லைக் குறிக்கிறது.    நிறுவனத்தின் முன்னோடி உறுப்பினரான ஹேவவிதாரன, 2005 இல் சந்தைப்படுத்தல் உத்தியோகத்தராக நிறுவனத்தில் சேர்ந்தார்.    20 ஆண்டுகளுக்கும் மேலாக, அவர் பதவிகளில் உயர்ந்து, 2021 முதல் தலைமை சந்தைப்படுத்தல் அதிகாரி ஆகவும், 2025 முதல் தலைமை மூலோபாய அதிகாரி ஆகவும் பணியாற்றினார்.    ஆனந்த செனவிரத்னவின் வெளிச்செல்லும் தலைமையின் கீழ், சியபத பைனான்ஸ் வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் துறையில் ஒரு சக்திவாய்ந்த நிறுவனமாக மாறியது.    சியபத பினானஸ் பிஎல்சி என்பது இலங்கை மத்திய வங்கியால் ஒழுங்குபடுத்தப்படும் உரிமம் பெற்ற ஒரு முன்னணி நிதி நிறுவனமாகும், மேலும் இது சம்பத் வங்கி குழுமத்தின் மிகப்பெரிய முழுமையான துணை நிறுவனமாகும்.    இரண்டு தசாப்தங்களுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட இந்த நிறுவனம், குத்தகை, தங்கக் கடன்கள், தரகு, வணிகக் கடன்கள் மற்றும் நிலையான வைப்புத்தொகைகள் உள்ளிட்ட பல்வேறு நிதிச் சேவைகளை வழங்குகிறது.    சமீபத்தில் நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான தொழில்தருநர் வர்த்தக விருதுகளில், சியபத பினான்ஸ் பிஎல்சி தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக “சிறந்த தொழில்தருநர் வர்த்தக முத்திரை” என்ற பட்டத்தைப் பெற்றுள்ளது.    இந்த விருது, தொழில்தருநர் வர்த்தக முத்திரையிடலில் நிறுவனத்தின் சிறந்த நடைமுறைகள் மற்றும் புதுமையான உத்திகளை அங்கீகரிக்கிறது, இது ஊழியர் ஈடுபாடு, தக்கவைத்தல் மற்றும் ஊக்கமளிக்கும் பணியிட கலாசாரத்தை உருவாக்குவதற்கான அதன் வலுவான அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

விபரங்களுக்கு
Entertainment Stories
Explore More
சங்கர் - கமல் கூட்டணியின் அடுத்த அதிரடி: ‘இந்தியன் 3’ குறித்த மாஸ் அப்டேட் வெளியானது!

சங்கர் - கமல் கூட்டணியின் அடுத்த அதிரடி: ‘இந்தியன் 3’ குறித்த மாஸ் அப்டேட் வெளியானது!

இயக்குநர் சங்கர் - கமல்ஹாசன் கூட்டணியில் கடந்த 1996-ஆம் ஆண்டு வெளியான 'இந்தியன்' திரைப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. அதன் தொடர்ச்சியாக, கடந்த 2024-ஆம் ஆண்டு வெளியான 'இந்தியன் 2' திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இரண்டாம் பாகத்தின் தயாரிப்புப் பணிகளின்போதே, இந்த படத்தின் மூன்றாம் பாகமும் உருவாக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியிருந்தது. இந்த நிலையில், 'இந்தியன் 3' திரைப்படத்திற்கான பின்னணிப் பணிகள் தற்போது தொடங்கியுள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் பதாகை ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த படத்தில் கமல்ஹாசனுடன் சித்தார்த், காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர், பாபி சிம்ஹா மற்றும் எஸ்.ஜே. சூர்யா ஆகியோர் மீண்டும் நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

விபரங்களுக்கு
இணையத்தில் கசிந்ததா ‘ஜெயிலர் 2’? கொந்தளித்த படக்குழு கொடுத்த விளக்கம்

இணையத்தில் கசிந்ததா ‘ஜெயிலர் 2’? கொந்தளித்த படக்குழு கொடுத்த விளக்கம்

ஜெயிலர் 2’ திரைப்படம் இணையத்தில் கசிந்துவிட்டதாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் தகவலை படக்குழு மறுத்துள்ளது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2023ஆம் ஆண்டு வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.இதன் வெற்றியைத் தொடர்ந்து தற்போது ‘ஜெயிலர் 2’ திரைப்படம் உருவாகி வருகிறது. மீண்டும் ரஜினிகாந்த் – நெல்சன் திலீப்குமார் கூட்டணி இணைந்துள்ளதால், திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.இந்த திரைப்படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில், ‘ஜெயிலர் 2’ திரைப்படம் முழுமையாக இணையத்தில் கசிந்துவிட்டதாக நேற்று சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது.எனினும், இந்த தகவல் உண்மையல்ல என படக்குழு விளக்கம் அளித்துள்ளது.திரைப்படம் இணையத்தில் கசிந்ததாக வெளியான தகவல் தங்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதாகவும், பின்னர் அது வெறும் வதந்தி என்பது தெரியவந்ததாகவும் படக்குழு தெரிவித்துள்ளது.மேலும், திரைப்படம் தொடர்பாக சிலர் வேண்டுமென்றே எதிர்மறையான தகவல்களைப் பரப்பி வருவதாகவும், இதுபோன்ற உறுதிப்படுத்தப்படாத தகவல்களை ரசிகர்கள் நம்ப வேண்டாம் என்றும் படக்குழு கேட்டுக்கொண்டுள்ளது.

விபரங்களுக்கு
மீண்டும் சர்ச்சையான பேச்சு – விஜய் சேதுபதி சொன்ன குட்டிக்கதையின் பின்னணி என்ன?

மீண்டும் சர்ச்சையான பேச்சு – விஜய் சேதுபதி சொன்ன குட்டிக்கதையின் பின்னணி என்ன?

நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் அண்மையில் வெளியான ‘பத்தா’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், திரைப்படத்தின் வெற்றி விழா அண்மையில் நடைபெற்ற நிலையில், அதில் நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்த கருத்தொன்று தற்போது சமூக வலைத்தளங்களில் கவனம் பெற்றுள்ளது.‘சீதக்காதி’ திரைப்படத்தில் நடிப்பதற்காக இயக்குநர் பாலாஜி கமல்ஹாசன், அமிதாப் பச்சன், மோகன்லால் உள்ளிட்ட முன்னணி நடிகர்களை பரிசீலித்ததாக விஜய் சேதுபதி குறிப்பிட்டுள்ளார்.இதுகுறித்து அவர் பேசுகையில், “இந்த கதாபாத்திரத்தில் கமல் சார் நடித்தால் நன்றாக இருக்கும், அமிதாப் பச்சன் சார் நடித்தால் நன்றாக இருக்கும், மோகன்லால் சார் நடித்தால் நன்றாக இருக்கும் என்று இயக்குநர் கூறுவார். நான் அருகிலேயே இருக்கிறேனே, என்னை கேட்கவில்லையே என நினைத்தேன்” என நகைச்சுவையாக தெரிவித்துள்ளார்.தொடர்ந்து, தெருநாயை உதாரணமாகக் குறிப்பிட்ட விஜய் சேதுபதி, “தெருவில் இருக்கும் நாய் அழகாகவும் சிறப்பாகவும் சுற்றிக்கொண்டிருக்கும். ஆனால் ஜெர்மன் ஷெப்பர்ட் நாய்தான் பிடிக்கும் என்றால் என்ன செய்வது?” எனக் கூறியுள்ளார்.மேலும், தனது கருத்தை வேறு விதமாகப் புரிந்துகொள்ள வேண்டாம் எனவும் அவர் நகைச்சுவையாகக் குறிப்பிட்டுள்ளார்.விஜய் சேதுபதியின் இந்தப் பேச்சு இடம்பெற்ற காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

விபரங்களுக்கு
தினமும் 15 தடவை இதை பண்ணனும் - விஜய் தேவரகொண்டா சொன்ன ரகசியம்

தினமும் 15 தடவை இதை பண்ணனும் - விஜய் தேவரகொண்டா சொன்ன ரகசியம்

நடிகை ராஷ்மிகா மந்தனா குறித்து அவரது கணவரும் நடிகருமான விஜய் தேவரகொண்டா தெரிவித்துள்ள கருத்து தற்போது இணையத்தில் கவனம் பெற்றுள்ளது. இருவரும் இணைந்து நடித்த திரைப்படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ஜோடியாக மாறிய ராஷ்மிகா மந்தனா மற்றும் விஜய் தேவரகொண்டா, கடந்த பெப்ரவரி மாதம் திருமணம் செய்துகொண்டனர். இந்தநிலையில், இருவரும் இணைந்து நடித்துள்ள ‘ரணபாலி’ திரைப்படத்தின் விளம்பரப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக இருவரும் பல்வேறு நேர்காணல்களில் பங்கேற்று வருகின்றனர்.அவ்வாறான ஒரு நேர்காணலில், தனது திருமண வாழ்க்கை குறித்து பேசிய விஜய் தேவரகொண்டா, தான் மகிழ்ச்சியான திருமண வாழ்க்கையில் இருப்பதாகவும், ராஷ்மிகா தனது மனைவியாக கிடைத்தது தமக்கு பெரும் பாக்கியம் என்றும் தெரிவித்துள்ளார்.மேலும், உறவை கையாள்வதில் தான் முதிர்ச்சியானவர் என்றாலும், ராஷ்மிகா தினமும் 10 முதல் 15 முறை ‘I Love You’ என்று சொல்லுமாறு தன்னை நினைவூட்டிக்கொண்டே இருப்பார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.உறவில் ஈடுபாடும் அன்பும் தொடர்ந்து வெளிப்படுத்தப்பட வேண்டும் என்றும், சிறியதாகத் தோன்றும் இதுபோன்ற விடயங்கள்கூட ஆரோக்கியமான உறவுக்கு முக்கியமானவை என்றும் விஜய் தேவரகொண்டா தெரிவித்துள்ளார்.அவரது இந்தக் கருத்து தற்போது ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்து வருகிறது.

விபரங்களுக்கு
இதை வரமாகத்தான் பார்க்கிறேன் - ப்ரீத்தி முகுந்தன் நெகிழ்ச்சி

இதை வரமாகத்தான் பார்க்கிறேன் - ப்ரீத்தி முகுந்தன் நெகிழ்ச்சி

அசோக் செல்வன் - ப்ரீத்தி முகுந்தன் நடிப்பில், ஆர். கார்த்திகேயன் இயக்கத்தில் வெளியான ‘அன்பில் அவன்’ திரைப்படத்தின் வெற்றி விழா நன்றி தெரிவிக்கும் நிகழ்வு நடைபெற்றது.நிகழ்ச்சியில் பேசிய நடிகை ப்ரீத்தி முகுந்தன், “படம் பார்த்துவிட்டுப் பெண்களும், இளம் பெண்களும் தங்கள் உணர்வுகளைப் பகிர்ந்துகொண்டது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. படத்தைப் முதன்முதலில் திரையரங்கில் பார்த்தபோது பதற்றத்தில் ஒன்றரை மணி நேரம் நின்றுகொண்டே பார்த்தேன்; அப்போது என் கண்களில் கண்ணீர் வந்தது. ஒரு நடிகையாக இப்படிப்பட்ட படத்தில் நடித்தது வரம்” என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.மேலும், இந்தப் படத்திற்கு ஆதரவளித்த பத்திரிகையாளர்கள், ஊடகங்கள் மற்றும் ரசிகர்களுக்கு அவர் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்.

விபரங்களுக்கு
எம்.ஜி.ஆர், விஜயகாந்த் போல் உதவ வேண்டும்: மக்களுக்கு திருப்பிச் செய்ய ஆசை

எம்.ஜி.ஆர், விஜயகாந்த் போல் உதவ வேண்டும்: மக்களுக்கு திருப்பிச் செய்ய ஆசை": ரசிகர்மன்ற நிர்வாகிகள் சந்திப்பில் நடிகர் சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி!

ரசிகர் மன்ற நிர்வாகிகளுடனான சந்திப்பு நிகழ்வில் நடிகர் சிவகார்த்திகேயன் கலந்துகொண்டு பேசிய விடயங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. அப்போது அவர் பேசுகையில், "நான் மக்களால் உருவாக்கப்பட்டவன். எனக்கு பெயர், புகழ், வசதியை கொடுத்தது மக்கள் தான். அதனால் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும், திருப்பி ஏதாவது செய்ய வேண்டும் என நினைக்கிறேன் என தெரிவித்தார். மேலும் இந்த நிர்வாகிகள் சந்திப்பை ஏதோ புதிதாக நடத்தவில்லை, 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை சந்திப்பை நடத்துகிறோம். நாள்தோறும் நற்பணி செய்வோம், மாதந்தோறும் மாவட்டம் தோறும் நற்பணிகளை செய்யத் திட்டமிட்டுள்ளோம் எனவும் கூறினார். எம்.ஜி.ஆர், விஜயகாந்த் போல் நாமும் உதவி செய்ய வேண்டும். முகம் தெரியாத ஒருவருக்கு உதவி செய்யும் போது நாம் இறந்தும் வாழ்வோம். இவ்வளவு செய்வதால் நமக்கு நிச்சயமாக பலன் உண்டு. ஆனால், யாருக்காகவும், யாரையும் எதிர்க்கவும் இதை செய்யவில்லை, 'நான் பெரியவன்' என்ற போட்டிக்காகவும் இதை செய்யவில்லை" என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

விபரங்களுக்கு
அஜித்தின் எதிர்பார்ப்பு நிறைவேறுமா? - வைரலாகும் காணொளி

அஜித்தின் எதிர்பார்ப்பு நிறைவேறுமா? - வைரலாகும் காணொளி

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான அஜித்குமார், திரைப்படங்களில் நடிப்பதோடு சர்வதேச அளவிலான சிற்றூந்து பந்தயங்களிலும் தனது அணியுடன் தொடர்ந்து பங்கேற்று வருகிறார்.இந்நிலையில், அஜித்குமாரின் அணி போர்த்துக்கலில் நடைபெறவுள்ள சிற்றூந்து பந்தயத்தில் பங்கேற்கவுள்ளது. எதிர்வரும் 9 மற்றும் 10ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள இந்தப் போட்டியில் தனது அணி பங்கேற்பதை நடிகர் அஜித்குமார் காணொளி ஒன்றின் மூலம் உறுதிப்படுத்தியுள்ளார்.அந்த காணொளியில், தங்களது அணிக்குத் தொடர்ந்து அன்பும் ஆதரவும் வழங்குமாறு ரசிகர்களிடம் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். இந்த காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.சில வாரங்களுக்கு முன்பு லண்டனில் நடைபெற்ற சில்வர்ஸ்டோன் சிற்றூந்து பந்தயத்தின் மிச்செலின் லீ மான்ஸ் கப் போட்டியில் அஜித்குமாரின் அணி பங்கேற்றது.இந்தப் போட்டியைத் தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் நடிகருமான விஜய் நேரில் சென்று தொடங்கி வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

விபரங்களுக்கு
சிறிய காலுறை... குட்டி கைகள்... : மீண்டும் தாயாராகிறார் கியாரா அத்வானி

சிறிய காலுறை... குட்டி கைகள்... : மீண்டும் தாயாராகிறார் கியாரா அத்வானி

பிரபல பொலிவூட் நடிகர்களான சித்தார்த் மல்ஹோத்ரா மற்றும் கியாரா அத்வானி தம்பதி, தங்களது இரண்டாவது குழந்தையை எதிர்பார்ப்பதாக அறிவித்துள்ளனர். இவர்கள் இருவரும் இணைந்து வெளியிட்ட சமூக வலைத்தளப் பதிவில், சிறிய காலுறைகளை குழந்தையின் கைகள் பிடித்திருக்கும் நிழற்படத்துடன் “மீண்டும் ஒரு முறை மிகப்பெரிய பரிசால் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளோம்” என மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளனர். இந்த அறிவிப்புக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். சித்தார்த்–கியாரா தம்பதிக்கு 2025ஆம் ஆண்டு ஜூலை 15ஆம் திகதி பெண் குழந்தை பிறந்தது. இருவரும் 2023ஆம் ஆண்டு பெப்ரவரி 7ஆம் திகதி ராஜஸ்தானில் திருமணம் செய்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

விபரங்களுக்கு
Hiru TV News | Programmes
/////////////////////////////////////////////// Commented on 2025-09-17 ////////////////////////////////////////////////////